கேரளாவில் நிபா வைரஸால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு: ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியது இந்தியா

0
1222
Nifa virus Kerala increased 12 India sought assistance Australian

Nifa virus Kerala increased 12 India sought assistance Australian

இந்திய கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசின் உதவியை இந்தியா நாடியுள்ளது.

குயின்ஸ்லேண்ட் அரசுக்கு இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் மனிதர்களுக்கு நிபா வைரஸ் எதிர்ப்புசக்தி கொண்ட மருந்துகள் இருப்பின் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பு சிகிச்சை பரிசோதனை கூடத்தில் பலனளிப்பதாக தகவல் வெளியான போதும் இதுவரை மனிதர்களுக்கு சோதிக்கப்படவில்லை.

கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்த நிலையில் அக்குடும்பத்தின் நான்காவது நபர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இதனால் நிபா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நான்கு பேருக்கு சிகிச்சையளித்த தாதியின் மரணமும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 80 பேருக்கு இந்த நோய் பரவியிருக்கலாம் என்ற பீதியால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Nifa virus Kerala increased 12 India sought assistance Australian

More Tamil News

Tamil News Group websites :