காட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்த பிரிட்டிஷ் வீரர்!

0
832
British soldier stole & hide French woods

பிரிட்டிஷ் வீரர் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். British soldier stole & hide French woods

முன்னாள் பிரிட்டிஷ் வீரனான, 51 வயதான குறித்த நபர், மத்திய பிரான்ஸில் உள்ள வீடுகளில் 40 தடவைகள் திருடியுள்ளான். Surin என்ற சிறிய கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து அங்கு தங்கியிருந்தான்.

அப்பகுதிகளிலுள்ள வீடுகளில் அடிக்கடி திருடியுள்ளான். அங்குள்ள ஒரு வீட்டில் எட்டு தடவைகளுக்கு மேல் சமையலறையில் உள்ள பொருட்களையும், குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்களையும் திருடியுள்ளான். அதனால் குறித்த வீட்டினர், சமையலறைக்கு இரும்பிலான கதவு போட்டும், கதவை உடைத்து திருடியுள்ளான்.

இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தான். ஆனால் அங்கிருந்து தப்பித்து போன நிலையில், குறித்த குற்றவாளிக்கு பிரெஞ்சு காவல்துறை ஐரோப்பிய பிடியாணை வழங்கியது.

அதன் பின்னரே குறித்த கொள்கையன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது மர வீட்டில் இருந்து மடிக்கணனி, நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**