இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

0
769
Prasanth appointed Special Officer, Prasanth malaysia, malaysia tami news, malaysia, malaysia news,

{ Prasanth appointed Special Officer }

மலேசியா: முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில் இயங்கும் இந்தியர்களுக்கான சமூக நல விவவாகரப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓர், இந்தியராக பிரசாந்த் குமார் பிரகாசம் அதிகாரப் பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நடந்த ஆட்சிக் குழு கூட்டத்திற்குப் பிறகு நிருபரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் அட்லீ அசஹரி பிரசாந்த்தின் இப்பதவிக்கான நியமனத்தை
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டத்துறை கல்வி பயின்ற 24 வயதுடைய பிரசாந்த், கெ அடிலான் கட்சியில் இளைஞர் பிரிவில் மாநில செயலாளராகவும், பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவின் மாநில பொருளாலராகவும் பொறுப்பேற்று வருகின்றார்.

“பிறப்பு ஆவணங்கள் பிரச்சினை, ஜாசின் லாலாங் தமிழ்ப் பள்ளி, லிட்டல் இந்தியா நுழைவாயில், ஈமச்சடங்கிற்கான நிலப்.பிரச்சினை, மற்றும் மக்கள் எதிர் நோக்கி வந்த சமூக நலப் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடிய பிரசாந்துக்கு ஹிண்ட்ராப்பின் மக்கள் எழுச்சியும், அன்வார் இப்ராஹிமின் மறுமலர்ச்சி எழுச்சியும் தாம் அரசியலில் ஈடுபட உந்துதலாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிலவி இருக்கும் சிவப்பு அடையாள அட்டை, பிறப்பு ஆவணங்கள் பிரச்சினை, தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கும் பிரச்சினை, வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து , ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சுவாமிநாதனுடன் இணைந்து சமுதாயப் பிரச்சினைக்கு முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரசாந் நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

Tags: Prasanth appointed Special Officer

<< RELATED MALAYSIA NEWS>>

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>