வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!

0
774
case screening actress violence provoked violence

case screening actress violence provoked violence

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சின்னத்திரை நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வீடியோ ஒன்றை நிலானி – காவல்துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருப்பதாக கூறியிருந்தார், மேலும் துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை எனவும் இது திட்டமிட்டு நடந்ததாகவும் அவர் வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

முதலில் ஒரு காவல் அதிகாரிதான் பேசியதாக தகவல்கள் வெளியானது, பிறகுதான் தெரியவந்தது, இவர் சின்னத்திரை நடிகை நிலானி என்று.

இதனையடுத்து அவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :