டுபாய் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற அந்நாடு ”வேர்க் பண்டல்”(Work Bundle) என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்களை பெற 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
விசா பெறுவதற்கான முறை
16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும் என விசா பெறுவதற்கான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் புதிய செயல்முறை மூலம் தற்போது விசா பெறுவதற்கான செயன்முறை எளிதாகியுள்ளது.
இதன்படி 5 நாட்களில் டுபாய் விசா பெற முடியும் எனவும் இதற்கு 5 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட நாட்கள்
அத்துடன் இந்த செயல்முறைக்காக 7 முறை விசாமையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததாகவும் தற்போது அது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேர்க் பண்டல் என்ற இந்த தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும்.
மேலும், டுபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மாற்றும்.
இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் டுபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல் மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக சேர்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.