இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இத்தாலிய கனடிய பிரதமர்கள் சந்திப்பு

0
185

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலொனி கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை ரொறன்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இத்தாலிய பிரதமர் ரொறன்ரோவிற்கு விஜயம் செய்துள்ளார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதார மற்றும் மூலோபாய என்பன தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிப்பெயர்வு, பேண்தகு பொருளாதார அவிபிருத்தி, செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.