Nice பகுதியில் கிட்டத்தட்ட 1,500 பொதுத்துறை ஊழியர்கள் பிரெஞ்சு அரசாங்க சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நேற்று செவ்வாயன்று மாஸ்னா இடத்தில் கூடிய கூட்டம் வேலைகளை ஒழுங்கமைக்கவும் மற்றும் பிரெஞ்சு அரசின் பெரும் பகுதிகளை மாற்றியமைக்கும் ஜனாதிபதி மக்ரோனின் உறுதிமொழியை எதிர்த்து போராடும் ஒரு தேசிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.9 French unions protests- strikes
ஒன்பது தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவளித்தன. இதில் பாடசாலை ஊழியர்கள், தபால் சேவைகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். பல தசாப்தங்களுக்கு பிறகு இவ் ஆர்பாட்டத்திலேயே நிறைய மக்கள் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரயில் சாரதிகள் தங்கள் நீண்ட வேலைநிறுத்தங்களில் ஒரு பகுதியை தொடர்கின்றனர். இதனால் TGV இன் ஐந்து ரயில்களில் 3 ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் ஐந்து பிராந்திய ரயில்களில் ஒரு ரயில் மட்டுமே சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!