ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, டயானா ஹெய்டனுக்கு எதற்குக் கொடுத்தார்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லக் தேப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.Reason Miss World Diana title
பாஜகவைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் இதுபோல் நகைப்புக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்குவது 2ஆவது முறையாகும். கடந்த வாரம், ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பிப்லக் தேப், மகாபாராதம் காலத்திலேயே, internet கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சி ஏற்படுத்தினார். தற்போது உலக அழகி பட்டம் கொடுத்ததைக் கையில் எடுத்துள்ளார்.
நேற்று அகர்தலா நகரில் உள்ள பிரஜ்னா பவனில் கைத்தறி கண்காட்சியை முதல்வர் பிப்லா தேவ் தொடங்கிவைத்தார். அப்போது பேசியதாவது:
உலக அழகிப் போட்டிகள் அனைத்தும், அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களின் பிடியில் நடத்தப்படுகின்றன. தாங்கள் தயாரித்த, பொருட்களை முகத்தில் பூசியும், ஆடைகளை அணிந்தும் வலம் வர வைக்கிறார்கள்.
ஆடைச் சந்தைகளில் அதிகாரம் படைத்த சர்வதேச நிறுவனங்கள் செய்யும் செயலாகும். எந்த ஆண்டு யாருக்கு அழகிப்பட்டம் சூட்ட வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து போட்டியை நடத்துகிறார்கள்.
உலக அழகிப் போட்டியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, இந்தியப் பெண்கள் முடி சூடப்பட்டார்கள். மிஸ் வோர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் போன்ற பட்டங்கள் இந்திய பெண்களுக்கு கிடைத்தன. எந்த பெண்கள் பங்கேற்று இருந்தாலும் கிடைத்திருக்கும். டயானா ஹைடன் கூடப் பங்கேற்று உலக அழகிப்பட்டம் பெற்றுவிட்டார் என சொல்லி சிரித்தார்.
டயானா ஹைடனுக்கு ஏன் உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள் என புரியவில்லை. நான் இதை எதிர்க்கவில்லை, ஆனால் தேர்வு செய்த முறையைத்தான் கேள்வி கேட்கிறேன்.
1997-ம் ஆண்டு உலக அழகிப்பட்டம் ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினார்கள். அதில் நியாயம் இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியப் பெண்களின் சாயலை, அழகை கொண்டிருக்கிறார். இந்தியப் பெண்கள் என்றால், லட்சுமி, சரஸ்வதியின் அழகை வெளிப்படுத்துவார்கள். அதை ஐஸ்வர்யா முகம் வெளிப்படுத்தும்.
இந்திய பெரும்பாலான பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் குறித்து தெரியாது. அவர்கள் தங்கள் உடலைக் களிமண் கொண்டும், தலைமுடியைச் சாம்பல் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால், உலக மயமாக்கலுக்குப்பின், சர்வதேச நிறுவனங்களின் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் மாபியா இந்தியாவில் வந்து மிகப்பெரிய சந்தையைப் பிடித்துவிட்டது.
அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், 125 கோடி இந்தியர்களில் 50சதவீதம் பெண்கள் உள்ள சந்தையை, பிடிக்க முயல்கிறார்கள். இதற்காகத்தான் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இந்திய பெண்களுக்கு உலக அழகிப்பட்டம், பிரபஞ்ச அழகிப்பட்டம் கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து நாட்டில் மூலை முடுக்கெல்லாம் அழகு நிலையம் அமைக்கப்பட்டது. திரிபுராவில் கூட அழகுநிலையம் ஏராளமாக அமைக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறிவிட்டது. இப்போது இந்தியாவில் இருந்து ஒரு அழகி கூட தேர்வு செய்யப்படுவதில்லை. சர்வதேச நிறுவனங்கள் இந்தியச்சந்தையை பிடித்துவிட்டன. அடுத்த சந்தையைத் தேடி அலைகின்றன.
இவ்வாறு முதல்வர் பிப்லா தேவ் மேலும் தெரிவித்தார்.
நன்றி: இணையம்
**MOST RELATED NEWS**
- தோனி மனைவியின் இடுப்பை காணோம்? (புகைப்படம் உள்ளே!)
- காதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்???
- மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? இம்ரான் தாஹிர்!
- திருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்!
- அந்த ஆசை வந்து விட்டால் நான் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி
- Google சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்!
- பிச்சைக்காரரிடமிருந்து கொள்ளையடித்த நபர்!
- வயதான பிச்சைக்காரரை திருமணம் செய்த அழகான பெண்!
- மார்பகத்தில் டாட்டூவுடன் அரை நிர்வாணத்தில் கலக்கும் நடிகரின் தங்கை!
**Tamil News Groups Websites**