{ Former Secretary State Hashim died }
மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் அரசாங்கச் செயலாளர் டான்ஸ்ரீ ஹாஷிம் அமான், சிகிச்சைப் பலன் அளிக்காமல் நேற்று காலமானார். இதனை நாட்டின் தற்போதைய அரசாங்கச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்ஸா உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுச் சேவையின் தரத்தை உயர்த்த எப்பொழுதும் முயற்சித்தவரும் பல அனுபவங்களைக் கொண்டவருமான டான்ஸ்ரீ ஹாஷிம் அமானின் குடும்பத்திற்கு அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
89 வயதான ஹாஷிம் அமான், அரசாங்க ஊழியராக ஏறக்குறைய 27 வருடம் பணியாற்றி வந்துள்ளார்.
சுகாதார மற்றும் தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளராக பதவியேற்ற அவர், அதன் பின்னர் அரசாங்கச் செயலாளராக 1980ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரைப் பதவி வகித்து வந்துள்ளார்.
Tags: Former Secretary State Hashim died
<< RELATED MALAYSIA NEWS>>
*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!
*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!
*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!
*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்
*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!
*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை
*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!
*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!