பொதுவாகவே அனைவரும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஒரு சிலருக்கு வயதாகும் முன்னதாகவே முகத்தில் சுருக்கம் ஏற்பட தொடங்கி விடும்.
இது ஒவ்வொருவருக்கும் பல காரணங்களால் நிகழ்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
முகத்தில் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
தூக்கம் என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இது பெரும்பாலும் சருமத்திற்கு முக்கியமானதாக இருகிறது. இது செய்வதால் முகத்திற்கு எவ்வாறன பாதிப்புகள் ஏற்படுகிறது தெரியுமா?
முகத்தை வலது மற்றும் இடது பக்கத்தில் முகத்தை அழுத்தியபடி தூங்கினால் சருமம் அழுத்தப்பட்டு சருமம் பாதிக்கப்படும். இதன் காரணமாக முகத்தில் கோடுகள் ஏற்படும்.
மேலும் இந்த கோடுகள் தாடை மற்றும் கழுத்தின் அடிப்பகுதியிலும் கன்னங்களிலும் இந்த கோடுகள் தோன்றலாம்.
அதனால் இரவு தூக்கம் உங்கள் சரும ஆரோக்கியத்தில் குறிப்பாக சுருக்கம் இல்லாத சருமத்துக்கு ஏற்றதே.
தூக்கத்தினால் ஏற்படும் சுருக்கத்தை தடுக்க முடியுமா?
- தூங்கும் போது மல்லாந்து தூங்க வேண்டும்.
- சிறந்த தலையணையை தேர்ந்தெடுக்கவும்.
- பருத்தியிலிருந்து பட்டு அல்லது சாடின் போன்ற உறைகளை பயன்படுத்த வேண்டும்.
- சுருக்கங்களை போக்க நைட் க்ரீம்களை முயற்சிக்கலாம்.
தூக்கமின்மையால் ஏற்படும் அதாவது, தொங்கும் இமைகள், கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள், சுற்றிலும் மெல்லிய கோடுகள், வீங்கிய கண்கள் என இருக்கும். இதை தடுப்பதற்காக தூங்க வேண்டும்.