அபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’

0
1364

(Celebrity Abarnathi Met Fans Request To Marry Abarnathi Army Fan)

நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் அபர்ணதி. போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர் இறுதிப்போட்டிக்கு வந்திருந்த அபர்ணதி சிலகாலம் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி முழுநேரமாக குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்தார்.

பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் எதையுமே கருத்திலெடுக்காமல் புறக்கணித்து வந்த அபர்ணதி தற்போது பேட்டிகள் நிகழ்ச்சிகள் என்று பிஸியாகியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

அந்தளவு தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர் போட்டியில் இருக்கும் போது தமிழ்நாடு இளைஞர்கள் ஆர்மபித்த அபர்ணதி ஆமி தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அந்த ஆமியிலிருந்து சிலரை நேரடியாக சந்தித்து தனது அன்பை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு ரசிகன்’ ஆர்யா வேறு திருமணம் செய்தால் செய்து கொண்டு போகட்டும். நான் என்னமும் திருமணம் செய்யாமல் உங்களுக்காகவே காத்திருக்கிறேன். என்னை திருமணம் செய்வீர்களா?’ என்று பளீர் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அபர்ணதி ‘நான் உங்கள் மேல் நிறைய நான் மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறேன். அது காதலாகுமா என்றால் இல்லை. ஆனால் உங்கள் அன்பு, என் மீது வைத்த பாசம் தான் என்னை துன்பத்தில் இருந்து மீட்டுவந்தது. அதற்கு நான் எப்போதுமே உங்களுக்கு கடமைப்பட்டவள்.’ என்று உணர்ச்சி பொங்க பதிலளித்திருந்தார்.

Tag: Celebrity Abarnathi Met Fans Request To Marry Abarnathi Army Fan