(Tamil Nadu Ramanathapuram Sub Inspector Attack 50 Years Old Man)
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கையை பார்த்து குறி சொல்லும் வேலை பார்த்து வரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முனியசாமி செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபணியுள்ளது.
சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமிக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உண்டு. தான் விரைவில் ஓய்வு பெறவுள்ளதால் தன் எதிர்காலம் எப்படி இருக்குமென அறியும் ஆவலுடன் குறித்த நபரிடம் குறி கேட்டுள்ளார்.
அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.
ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.
இதை பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் வைரலடைய செய்துள்ளார்கள்.
இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)