உலகக் கிண்ணத்தில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை

0
226

உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலகக் கிண்ணத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 70 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷகிதியை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க். இந்த விக்கெட்டின் மூலம் உலகக் கிண்ணத்தில் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை 26 விக்கெட்டுகளை போல்டு மூலம் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றியுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் அதிக போல்டு எடுத்த வீரர்கள்

மிட்செல் ஸ்டார்க் – 26 விக்கெட்டுகள்

வாசிம் அக்ரம் – 25 விக்கெட்டுகள்

லாசித் மலிங்கா – 18 விக்கெட்டுகள்

முத்தையா முரளிதரன் – 17 விக்கெட்டுகள்

கிளன் மெக்ராத் – 15 விக்கெட்டுகள்