இரவு உணவை தவிர்த்தால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மனிதர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது, காலையில் அரசனை போலவும், மதியம் அரசியை போலவும், இரவு யாசகன் போன்று சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.
இதற்கு காரணம் என்னவெனில் நமது ஆரோக்கியமே ஆகும். அதாவது இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டிய உணவுகளை சாப்பிட்டு முடித்துவிட வேண்டுமாம்.
இவ்வாறு செய்தால் மட்டுமே உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது இரவு உணவை தவிர்த்தால் என்ன பயன் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இரவு சாப்பிடாமல் இருந்தால் என்ன பயன்?
நமது உடம்பில் செரிமான உறுப்புகள் மாலை நேரத்திற்கு பின்பு சரியான முறையில் வேலை செய்யாமல் இருக்கும். இதனால் 7 மணிக்குள் உணவை சாப்பிட்டுவிட வேண்டும். அதன் பின்பு நாம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நிம்மதியான தூக்கம், காலையில் எழும்பும் போது சோர்வு இல்லாமல் காணப்படும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவு உணவை தவிர்க்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். உடம்பில் தேவையில்லாத கொழுப்பு தங்குவதையும் இதன் மூலம் தவிர்க்க வேண்டும்.. நல்ல கலோரிகள் சேமித்து வைப்பதற்கு இரவு உணவை தவிர்ப்பது நலமாகும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இரவு உணவை தவிர்ப்பதுடன், அதிகமான பசி இரவில் இருந்தால் சூப் போன்ற திரவ உணவினை எடுத்துக்கொள்ளலாம். இதையும் நீங்கள் 9 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான செரிமானம் இல்லையெனில் சர்க்கரை அளவு அதிகரிக்கும், ஆதலால் இரவு உணவை தவிர்ப்பது நல்லது.
இரவு ஒரு வேளை மட்டும் நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் பாகங்கள் அனைத்தும் வலுப்பெறுவதுடன், தேவையில்லாமல் பசியைத் தூண்டும் பழக்கத்திலிருந்தும் நம்மை விடுபடச் செய்யுமாம். ஆனால் இரவு உணவை தவிர்ப்பது நல்லது என்று கூறும் நேரத்தில் காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது… செரிமான திறன் அதிகமாக காலை வேளையில் கிடைக்கும் என்பதால் சத்துள்ள உணவுகளை காலையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.