16 பேருக்கும் மகிந்தவை இன்று சந்திக்க முடியவில்லை – திடீரென மாற்றம் – ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

0
743
cant meet mahindha Rajapaksha freedom party members

cant meet mahindha Rajapaksha freedom party members
தேசிய அரசாங்கத்தின் அதிருப்தி குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் உறுப்பினர்கள் சிலர் அத்தியாவசிய பணிகளின் காரணமாக கொழும்பிற்கு வெளியே உள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதhக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பை எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
cant meet mahindha Rajapaksha freedom party members

More Tamil News

Tamil News Group websites :