கனடாவில் காதலியை 47 முறை கத்தியால் குத்திய நபருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
258

கனடாவில் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை படுகொலை செய்தமைக்காக நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அகர் ஹசன் என்ற நபர் மெலின்டா வசிலிஜி என்ற காதலியை கொலை செய்திருந்தார். 47 தடவைகள் குறித்த பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

படுகொலையின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஹசானை அமெரிக்க பொலிஸார் கைது செய்து கனடாவிடம் ஒப்படைத்தனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ஹாசானுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.