இரகசியங்களை மறைக்கும் ரணில்; சஜித் அம்பலப்படுத்தும் தகவல்

0
265

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள், அதை அரசியலுக்கு பயன்படுத்திய கட்சிகள் போன்றவற்றை பற்றிய உண்மை தான் நாட்டிற்கு இப்போது தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்திடம் கேட்ட போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறைத்தது போலவே இரகசியங்கள் ஒளிந்திருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மறைத்துள்ளதாக அவர் குற்றசாட்டு முன்வைத்துள்ளார்.

அத்துடன் இரகசியமான மற்றும் உணர்ச்சிகரமான விடயங்கள் என்று கூறி தற்போதைய ஜனாதிபதியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை மறைத்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.