கணேமுல்ல சஞ்ஜீவ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவிய அரசியல்வாதிகள்

0
366

அரசியல் உதவியுடன் தான் நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவருமன கணேமுல்ல சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கடந்த 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்குள் ஏற்பட்ட சிக்கலான நிலைமை காரணமாக அரசியல் உதவியுடன் வெளிநாடு சென்றதாகவும் இந்தியா மற்றும் நேபாளத்தில் தங்கி இருக்க முடியாத காரணத்தினால் போலி கடவுச்சீட்டை தயாரித்து இலங்கை திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சஞ்ஜீவ விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவிய அரசியல்வாதிகள் குறித்தும் சஞ்ஜீவ அதிகாரிகளிடம் தகவல்கள் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.