பேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்!

0
778
bruising two young men collided behind bus

bruising two young men collided behind bus

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகேயுள்ள லெட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் வெங்கடேஸ்வரன்(21), இவர் நாகை மாவட்டம் கீவளூர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்,

இவரும் இவரது நண்பருமான திருச்சி மாவட்ட ஆட்சியரக சாலை ராஜா காலனியைச் சேர்ந்த சையத் மைதீன் மகன் ஹாஜா பக்ருதீனும்(25) தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர், அப்போது தஞ்சாவூரில் இருந்து குறும்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் அவர்களின் இரு சக்கர வாகனம் மோதியது, இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :