கனடாவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபதேகர் சாஹிப் நகரை சேர்ந்த 32 வயதான ஹந்தீப் சிங் மாரடைப்பால் இறந்துள்ளார்.
அதே போன்று பதிவான மற்றொரு சம்பவத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் பிராம்டனில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இரவு தூங்க சென்ற அவர் காலை எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சுரேந்தர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் கனடாவுக்கு வந்துள்ளார். ஹந்தீப்பும், சுரேந்தரும் நண்பர்களா அல்லது உறவினர்களா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.



