டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலி!

0
648
least 8 people killed tractor fell trolley Sambal district

least 8 people killed tractor fell trolley Sambal district

இந்திய உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர் என சம்பால் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்திலிருந்து இன்று காலை ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் அலிகர் நோக்கி சென்றுகொண்டிருநத்து.

இந்த டிராக்டர் சம்பால் மாவட்டம் ராஜ்புரா பகுதியில் உள்ள அனுப்ஷாகர் வீதியில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

பின்னர், வீதியோர பள்ளத்தில் டிராக்டர் டிராலி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் கார்பெட்டுகள் விற்பனை செய்வதற்காக அலிகார் நோக்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக சம்பால் மாவட்ட பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

least 8 people killed tractor fell trolley Sambal district

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :