அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்

0
1710
sri lankan government website hacked

(sri lankan government website hacked)
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத் தளங்கள், தம்மால் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ சைபர் படையினால், உரிமை கோரப்படும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமது அமைச்சின் இணையத்தளத்தில் தாம் எதுவும் செய்யவில்லை என்றும், வெள்ளிக்கிழமை ஆகையால் அமைச்சில் எவரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தளத்தில் ஏதாவது செய்ய வேண்டுமாயின், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும், தற்போது தாமும் அமைச்சுக்கு வெளியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சுற்றுலாத் துறை அமைச்சின் இணையத்தளத்தின் சிங்கள மொழிப் பக்கம் முடக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை என்று, கணினி அவசர தயார்நிலைக் குழுவின் தலைவரான ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அமைச்சிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. நாம் இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை