சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்

0
1262
9 women arrested gambling Andhra India Tamil News

ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். (9 women arrested gambling Andhra India Tamil News)

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தாடே பள்ளி என்ற ஊரிலுள்ள அதிகளவிலான வீடுகளில் பணத்திற்காக பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூதாட்டம் குறித்து முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறைப்பாடு கிடைத்தது.

இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் நேற்றைய தினம் தாடேபள்ளிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, டி.எஸ்.பி. ராமஆஞ்சநேயலு வீடொன்றில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை கைது செய்ததுடன், இவர்களில் 4 பேர் ஆண்கள் மற்றும் 9 பேர் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

காஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி

ஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; 9 women arrested gambling Andhra India Tamil News