தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி

0
978
4 people died Dengue Swine Flu Tamil Nadu India Tamil News

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியான நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. (4 people died Dengue Swine Flu Tamil Nadu India Tamil News)

வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதமாக அதிகரித்துள்ளது.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

டெங்கு கொசுவை நுளம்பை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரத்தை பேணி பராமரிக்காத தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு மாதமாக பருவமழை பெய்ய ஆரம்பித்த பின்னர் டெங்கு பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

குறிப்பாக கடந்த மாத இறுதியில்தான் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக வேகமாக பரவி நிறைய பேரை நிலை குலைய செய்துள்ளது.

டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 34 பேர் பலியாகிவிட்ட நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதுமான மருந்து, மாத்திரைகள் கைவசம் இருப்பதால் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.

டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு சுமார் 3,600 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி கை கழுவுங்கள் என்ற பிரசாரம் தீவிரமாகியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; 4 people died Dengue Swine Flu Tamil Nadu India Tamil News