தமிழ்நாடு உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பஸ்ஸூம் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (4 killed bus accident near ulundurpettai tamil Nadu)
சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது.
குறித்த தனியார் பஸ் அஜீஸ் நகர் அருகில் வந்த போது லொறியுடன் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததனால் இந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதுடன், இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
- தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி
- ஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை
- தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; 4 killed bus accident near ulundurpettai tamil Nadu