அரசியல் தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி என்று நாம் நினைத்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டோம் என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.Sumanthiran Political Solution
சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் தென்மராட்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டார். அங்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போது நடந்த மாகாண சபைத் தேர்தலிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்த பின்னர் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் நாம் போட்டியிடவில்லை. போர் முடிந்த பின்னர் வடக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் பங்குபற்றினோம்.
அரசு சில நடவடிக்கைகளை வரவு – செலவுத் திட்டத்துக்கு உட்பட்டு முன்னெடுக்கின்றது. அவற்றின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டிலும், 2019ஆம் ஆண்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பெறுத்தவரையில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 5 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அரசு எமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
வடக்கு, கிழக்கு செயலணியில் நாம் பங்கு கொள்கின்றோம். அதன் ஊடாக அவசரமான, அத்தியாவசியமான விடயங்களான நில ஆக்கிரமிப்பு, நில விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, கைதிகள் விடுவிப்பு என்பன பற்றிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும், என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :



