வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.31 Government Officers Arrested Sri Lanka Tamil News
இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்நிலையில் மஹவெலி அதிகாரசபையின் அதிகாரியொருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
காணி உறுதிப்பத்திரமொன்றைப் பெறுவதற்காக 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே, மஹவெலி அதிகாரசபையின் அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!