300 ரூபாய் கொடுக்கவில்லை; மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை

0
104

மதுபானம் வாங்க 300 ரூபாவை தரவில்லை என மனைவியுடன் தகராறு செய்து அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த நபரொருவர் வீட்டின் பின்புறமுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் குளியாபிட்டிய எத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாமினி லக்சிகா சேனாநாயக்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் 42 வயதான அமில ரணசிங்க என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சில காலமாக தனித்தனியாக வாழ்ந்து வந்த தம்பதியினர் சில காலத்தின் முன்னர் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியதாகவும் அவர்களுக்கு 14 வயது மகன் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.