பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி விளையாட்டு, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தன்னார்வ சேவை ஆகியவற்றில் முன்மாதிரியாக இருப்பவர்களுக்கு கௌரவ விருது வழங்கப்படுகிறது.
இந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான கௌரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை பிரித்தானியாவில் மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு இந்த கௌரவ விருது வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருது வழங்கி கௌவவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.