மக்கள் ஆணையின் படி செயற்படவுள்ளேன்; ரணில்

0
903
25th Memorial Ranasinghe Premadasa

(25th Memorial Ranasinghe Premadasa)
புதிய அமைச்சரவை ஊடாக மக்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆணையின்படி செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிலர் தங்களுக்கு ராஜயோகம் உள்ளதாகக் கூறுவதாகவும் மக்களின் விருப்பமே உண்மையான ராஜயோகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் விருப்பமுள்ளோர் எந்த தடைகள் வந்தாலும் முன்னேறிக்கொண்டே செல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; 25th Memorial Ranasinghe Premadasa