கனடாவில் 36 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு

0
48

கனடாவில் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டையோட்டின் மூலம் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பீட்டர்ப்ரோவ் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டில் குறித்த ஆற்றில் 130 அடி ஆழத்தில் மண்டையோடு மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மண்டையோட்டை ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை நடத்தி மூன்றாண்டுகளின் பின்னர் அது யாருடைய மண்டையோடு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

38 வயதான ஜெரால்ட் ட்ரோச்சர் என்ற நபரின் மண்டையோடே இதுவென்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக இந்த மண்டையோடு யாருடையது என்பதை கண்டறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவுவோருக்கு 5000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.