உலகை திரும்பி பார்க்க வைத்த கனடா வாழ் ஈழத்தமிழ் அமைச்சரின் செயல்!

0
47

கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர்.

கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்வதுடன், அங்கு பல்வேறு அரசியல் களங்களிலும் கால் பதித்துள்ளனர்.

இதன் காரணமாக கனடாவிலும் சர்வதேச ரீதியிலும் அங்கு வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில் கனடாவின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி தமிழர்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணையானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்.