கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த இந்து மதத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களில் தான் மூன்று இந்து கோவில்களுக்கு சென்றதாகவும் அங்கு தனது அதிஷ்டத்துக்காக கையில் அன்புடன் கயிறு கட்டி விடப்பட்டதாகவும் அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒளி மிகுந்த பண்டிகையில் இருள் அழிய வேண்டும். கனடாவில் வாழும் இந்து மக்கள் சிறத்தவர்கள். நவம்பர் மாதம் இந்து மத காலாச்சார மாதமாக கனடாவில் கொண்டாடப்படுகிறது.
கனடா இந்துக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடக்க இருந்த தீபாவளி நிகழ்ச்சிகளை இந்திய வெளியுறவுத்துறை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.