மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலன் உட்பட 5 பேரை கொன்ற பெண்!

0
68

நைஜீரியாவில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு குறித்த பெண் கொடுத்துள்ளார்.

குறித்த மிளகு சூப்பினை காதலன் அவரது நண்பர்கள் பகிர்ந்து அருந்தியுள்ள நிலையில் காதலன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காதலி விசம் வைத்து கொன்ற உண்மை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.