நாணயம் வடிவமைத்தல் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி புரியாமல் வேறு யாரையாவது அல்லது ஊடகங்களை எப்படி குற்றம் சாட்ட முடியும் என்றும் ரணில் கேள்வி எழுப்பினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அனுபவமின்மையால் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் அது பற்றி தெரியாது பேசுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உதய ஆர் செனவிரத்ன அறிக்கை தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் பொய்களை கூறிய பின் பதவி விலகுவது மரபு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.