இலங்கை – இந்தியா தரைவழி இணைப்பு: பேச்சுகள் இறுதிகட்டத்தில்

0
80

இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”கடந்த மாதம் புதுடில்லியில் இது தொடர்பான கூட்டத்தில் இலங்கையின் உயர்மட்ட குழு பங்கேற்றது.

ராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே நெடுஞ்சாலை மற்றும் புகையிரத இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல்கள் இதன்போது நடைபெற்றன.

முன்மொழியப்பட்ட தரைவழி இணைப்பை ஏற்படுத்த மதிப்பிடப்பட்டுள்ள செலவு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்த முழு செலவையும் இந்தியா ஏற்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.