மும்பை லோகண்ட்வாலா வீதிக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்: திறந்து வைத்த போனி கபூர்

0
102

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு டுபாயில் வைத்து குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்தார் ஸ்ரீ தேவி. இந்நிலையில் ஸ்ரீ தேவியைக் கௌரவப்படுத்தும் விதத்தில் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்புக்கு ‘ஸ்ரீதேவி கபூர் சவுக்’ என பெயரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை பெயர்ப் பலகைத் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீ தேவியின் புகைப்படம் பொறித்த இப்பெயர்ப் பலகை அவரது கணவர் போனி கபூரினால் திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீ தேவியின் குடும்பத்தினர் இப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தான் வசித்து வந்துள்ளனர்.