கனடாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மைக் புல்லர்ட் தனது 67 ஆம் வயதில் காலமானார். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை கலைஞருமான புல்லர்ட், இடோபிக்கோக் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புல்லர்ட் தனது வீட்டில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்தினால் அவர் உயிரிழந்தார் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. சில காலமாக புல்லர்ட் நோய்வாய்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் மிக நீண்ட காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்ற தொகுத்து வழங்கியவர் என்ற பெருமை புல்லர்ட்டைச் சாரும் என தெரிவிக்கப்படுகிறது. கலைஞர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.