நோயாளியின் தாடியை சவரம் செய்தமைக்கு மன்னிப்பு கோரிய மருத்துவமனை

0
64

கனடாவில் நோயாளி ஒருவரின் தாடியை அனுமதியின்றி சவரம் செய்தமைக்காக மருத்துவமனை மன்னிப்பு கோரியுள்ளது. வில்லியம் ஹோஸ்லர் மருத்துவமனை இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.

சீக்கிய கனடியரான நபர் ஒருவரின் தாடி அவரது அனுமதி இன்றி சவரம் செய்யப்பட்டுள்ளது. 85 வயதான ஜோகிந்தர் சிங் கெலார் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கீழே விழுந்து ஏற்பட்ட காயங்களுக்காக சிங்கிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ரொறன்ரோ சென்ட் மைக்கேல்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிங், மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் பிரம்டன் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதன் போது குடும்ப அங்கத்தினரின் அனுமதியை கோராது குறித்த நோயாளியின் தாடியை சவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிங்கின் குடும்பத்தினர் இது தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த மருத்துவமனை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சீக்கியர்களின் கலாச்சார நம்பிக்கைகளின் அடிப்படையில் தாடி வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தாடி சவரம் செய்யப்பட்டமைக்கு மருத்துவமனை மன்னிப்பு கோரியுள்ளது.