தற்கொலைக்கு உதவுதல் கொலையாகாது; கனடாவில் விசித்திர வழக்கு

0
90

கனடாவின் ஒன்றானியோ மாகாணத்தைச் சேர்ந்த கெனத் லோவ் என்ற நபர் தற்கொலை கருவிகளை இணைய வழியில் விற்பனை செய்தார் என குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த இணைய வழி விற்பனையின் மூலம் ஒன்றாரியோ மாகாணத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், சர்வதேச ரீதியில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த தற்கொலை கருவிகளை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த நபருக்கு எதிராக கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தமக்கு எதிராக கனடிய சட்டத்தின் பிரகாரம் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட முடியாது என குற்றம் சுமத்தப்பட்ட கெனத் லோவ் தெரிவித்துள்ளார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக கொலை குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தற்கொலைக்கு உதவுதல் கொலையாகாது என்ற அடிப்படையில் கெனத் லோவின் சட்டத்தரணிகள் வாதங்களை முன் வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களை இந்த நபர் இணைய வழியில் விற்பனை செய்திருந்தார்.

குறித்த நபர் சுமார் ஆயிரம் தற்கொலை கருவி பொதிகளை உலகம் முழுவதற்கும் விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விநியோகத்தின் ஊடாக சுமார் 130 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.