உலக சாதனை படைத்தார் இலங்கை நட்சத்திர வீரர்: தொடர்ச்சியாக அரைச்சதம் அடித்து அசத்தல்

0
15

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி 25 வயதான அவர் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமானதிலிருந்து தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு இன்னிங்சில் ஐம்பதுக்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு முன் பாகிஸ்தானின் ஷௌத் ஷகீல், அவர் விளையாடிய முதல் ஏழு டெஸ்ட் போட்டிகள் ஒவ்வொன்றிலும் ஐம்பதுக்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று சாதனை படைத்திருந்தார்.

முன்னதாக இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (6) மேலும் மூவருடன் இணைந்து இந்த சாதனையை படைத்திருந்தார்.

அறிமுகத்திலிருந்து தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர்கள்

  • கமிந்து மெண்டிஸ் எட்டு முறை
  • சவுத் ஷகீல் ஏழு முறை
  • பெர்ட் சட்க்ளிஃப், சயீத் அகமது, பசில் புட்சர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆறு முறை

இதேவேளை, காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமலின் சதத்தின் உதவியுடன் மூன்று விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 306 ஓட்டங்களை குவித்துள்ளது.