இனி விடைத்தாள்களில் கிறுக்கி வைத்தால் No Marks: உண்மையான எந்திரன் வந்தாச்சு!

0
303

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது.

தற்போது கல்வித் துறையிலும் ஏஐ நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால் என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும்.

இது ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு காணும் முகமாக வந்துவிட்டது புதிய தொழிநுட்பம். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விடைத்தாள்களை திருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஏஐ தொழில்நுட்ப இயந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு நகலை ஆராய்ந்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து ஆசிரியர்களை எச்சரிக்கும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் நாம் பதில்களை கிறுக்கி வைத்தாலும் மதிப்பெண் கிடைக்கும் என்ற மாணவர்களின் மனப்பாங்கு இனி நிறைவேறாது.