சஜித்திற்கு ஆதரவு; பின்வாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

0
53

வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் எனவும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.