சஜித்துக்கு ஆதரவு பிரசார கூட்டம்: ஆட்கள் இன்றி ரத்து

0
83

யாழ்ப்பாணம், வடமராட்சி – உடுப்பிட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.

நண்பகல் வரை மக்களை ஒன்று திரட்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்வி கண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.