கைலாசாவில் வாழும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற ஆன்மிக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளமை பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பெண் சீடர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கி இந்த வழக்கை நித்தியானந்தா தொடர்ந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஜராக முடியாது என தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்போது நீதிபதி கூறுகையில்,
வழக்கு தாக்கல் செய்ய பெண் சீடருக்கு வழங்கிய அதிகார பத்திரம் மீது சந்தேகம் உள்ளது. நித்யானந்தா நேரிலோ, வீடியோ கான்பிரன்ஸ் மூலமோ ஆஜராயிருக்கலாம் தக்கரை நியமிக்க அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது.
காஞ்சி பெரியவர் கூறியது போல் துறவி துறவியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் உரைகள் சிறப்பானவை. கதவைத்திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன எனத் நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.