ICC யின் சிறந்த வீரருக்கான தேர்வு: பரிந்துரையில் வெல்லலகே, ஹர்ஷித

0
39

2024 ஆகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இலங்கை நட்சத்திரம் துனித் வெல்லலகேயும் இடம்பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ள மற்றைய வீரர்கள் ஆவர்.

இலங்கை ஆல் – ரவுண்டர் துனித் வெல்லலகே, கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக தனது சர்வதேச வாழ்க்கையில் மிக முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெல்லலகே தனது 108 ஓட்டங்கள் மற்றும் ஏழு விக்கெட்டுகளுடன் இந்திய தொடரில் சவாலை சமாளிக்க உதவியதுடன், ஒவ்வொரு ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களிலும் பங்களித்தார்.

இதேவேளை, 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த மகளிர் வீரரை தேர்வு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இலங்கை நட்சத்திரம் ஹர்ஷித சமரவிக்ரமவும் இடம்பெற்றுள்ளார். அயர்லாந்து அணியின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் மற்றும் கேபி லூயிஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ள மற்றைய வீரர்கள் ஆவர்.