பிரித்தானியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் ஒரு அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் மோரேயில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் பர்க்ஹெட் கோட்டையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிக்டிஷ் தளம் என்று அறியப்பட்டாலும், 1800 களில் பர்க்ஹெட் நகரம் கட்டப்பட்டபோது, கோட்டையின் பெரும்பகுதி மூடப்பட்டதால் அதன் புகழ் மங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மோதிரம் யாருக்கு சொந்தமானது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எப்படி இழந்தார்கள் என்பதற்கான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.