பிரித்தானியாவில் 1000 ஆண்டுகள் பழமையான பழமையான மோதிரம் கண்டுபிடிப்பு!

0
32

பிரித்தானியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் ஒரு அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் மோரேயில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் பர்க்ஹெட் கோட்டையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிக்டிஷ் தளம் என்று அறியப்பட்டாலும், 1800 களில் பர்க்ஹெட் நகரம் கட்டப்பட்டபோது, ​​​​கோட்டையின் பெரும்பகுதி மூடப்பட்டதால் அதன் புகழ் மங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மோதிரம் யாருக்கு சொந்தமானது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எப்படி இழந்தார்கள் என்பதற்கான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.