அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் அண்மையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர்,
“ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.
மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம், f2.8, க்ராப்ட், டெனோயிஸ்டு” என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த புகைப்படம், பகிரப்பட்டதில் இருந்து 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது.
சிலர் இந்த படத்தை “நம்பமுடியாதது” என்றனர். எக்ஸ் பயனர் ஒருவர், “இது மனதைக் கவருகிறது” என்றார். மற்றொருவர் “இந்த புகைப்படம் என் இதயத்தை தொட்டது” என்று பதிலளித்தார்.