டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாகியுடன் இளம்பெண் கைது!

0
30

டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளர்களின் தரவுகளை அரசாங்கத்திடமிருந்து மறைத்துப் பாதுகாத்தமை, குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாகியுடன் இளம்பெண் கைது! | Teenager Arrested With Chief Executive Of Telegram

இந்த நிலையில், தற்போது பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலி வவிலோவா இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் பவெலின் காதலி என்று நம்பப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவாகின்றன.

24 வயதான ஜூலி வவிலோவா துபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.